நாளை முதல் கடைபிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியானது

தமிழ் ​செய்திகள் இன்று


நாளை முதல் கடைபிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியானது

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

நாளை முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய மாவட்டங்கள் வகைப்படுத்தப்படும்.

அதற்கமைய குறித்த மாவட்டங்களில் மேலும் நடமாட்டக் கட்டுப்பாட்டை தளர்த்துவது மற்றும் கட்டுப்பாட்டை கடுமையாக்குதல் என்பன மேற்கொள்ளப்படும்.

நாடு முழுவதும் நடமாட்டக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர் ஏனைய மாகாணங்களுக்கான கட்டுப்பாடுகளும், மேல் மாகாணத்திற்கான கட்டுப்பாடுகளும் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஒரு வீட்டில் இருந்து இருவர் மாத்திரமே வௌியேற முடியும் என குறித்த சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முச்சக்கரவண்டிகளில் இருவரை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இயங்க அனுமதிக்கப்பட்டுளள்து.

அத்துடன் மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருக்கும்.

நாளை அதிகாலை 4.00 மணிக்கு தற்போது அமுலில் உள்ள பயணத் தடையை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார வழிகாட்டல்கள் அறிக்கையை கீழே காணலாம்