துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டார் – ஜனாதிபதி பொது மன்னிப்பு

முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் உறுதி செய்துள்ளார்.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் மொத்தமாக 93 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

அதேநேரம் ஏனைய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வா ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

உங்கள் கருத்தை கூறுங்கள்