தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1800 அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில், அது தொடர்ந்தும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி மற்றும் டெல்டா கொரோனா வைரஸ் திரிபு தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார பின்னடைவு என்பன தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் வருடத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி 2000 அமெரிக்க டொலரை அடையும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை காரணமாக தமது தொழிற்துறை பாரிய வீழ்ச்சியினை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண தொழிற்துறை சங்கத்தின் தலைவர் மங்கல ஹர்ச குமார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று (2021-07-12) 24k தங்கம் ரூபா.120,500 வரையில் விற்பனையாகி வருகின்றது. மேலும் 22k தங்கம் ரூபா.110 500 வரையில் விற்பனையாகி வருகின்றது.

இதுதவிர சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,506க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.4,506க்கு விற்பனையாகிறது.

இதுபோன்ற மேலும் பல முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை அறிந்து கொள்ள விருப்பமானவர்கள் எமது Whats App குழுவில் இணைந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்தை கூறுங்கள்