கோவிட் தொற்று காரணமாக நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது

கோவிட் தொற்று காரணமாக மத்தியில் இலங்கையில் சிசு பிறப்பு வீதம் சடுதியாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு காரணமாக திருமண வைபவங்கள் நடக்காத காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் வருடம் ஒன்றிற்கு 350,000 குழந்தை பிறப்புக்கள் நாட்டில் பதிவாவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று காரணமாக 3,500 பேர் உயிரிழந்துள்ள போதிலும் 350,000 குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒருவருடத்தில் சுமார் 350000 சிசுப் பிறப்புக்கள் பதிவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.