நடுவீதியில் ஆடைகளை கழற்றி போராட்டம் செய்த விமானப் பணிப்பெண்கள்

இத்தாலியில் வேலை இழப்பு மற்றும் ஊதிய குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான பணிப்பெண்கள் பொது வெளியில் ஆடைகளை கழற்றி போராட்டத்தல் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

இத்தாலியின் புதிய தேசிய விமான நிறுவனமான ஐடிஏ ஏர்வேஸ் (ITA Airways) கடந்த வாரம் சேவையை தொடங்கியது. ஆனால் தற்போது இத்தாலிய விமானப் போக்குவரத்தில் சில முக்கிய பிரச்சினைகள் எழுந்துள்ளது.

முன்னாள் அலிடாலியா (Alitalia) விமானப் பணியாளர்கள் வேலை இழப்பு மற்றும் ஊதியக் குறைப்புக்கு எதிராக இத்தாலிய வழியில் – தங்கள் ஆடைகளை கழற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரோம் நகரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க கேம்பிடோக்லியோவில் (Campidoglio) சுமார் 50 முன்னாள் விமானப் பணிப்பெண்கள் தங்கள் அலிட்டாலியா சீருடையை கழற்றி கீழே போட்டுவிட்டு, பின்னர் உள்ளாடையுடன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்தை கூறுங்கள்