யாழ் செய்திகள் இன்று – 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

தமிழ் ​செய்திகள் இன்று


யாழ் செய்திகள் இன்று – 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

யாழ் செய்திகள் இன்று – பதின்ம வயது சிறுமி ஒருவரை பா லிய ல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(11) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமி ஒருவரை, காவல்துறையினர் தமது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மேற்படி இரு சந்தேக நபர்களையும் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, குறித்த சிறுமி மேற்படி இரு இளைஞர்களால் இருவேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 19 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்று (12) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் செய்திகள் இன்று