மீண்டும் நாளாந்தம் மின்வெட்டு – பொது மக்களுக்கான அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


மீண்டும் நாளாந்தம் மின்வெட்டு – பொது மக்களுக்கான அறிவிப்பு

நாட்டின் சில இடங்களில் மீண்டும் மின்சார விநியோகத் தடை அமுலாகவுள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின்பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில், அது தேசிய மின் கட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் தினங்களில் நாளாந்தம் மாலை 6.30 தொடக்கம் 9.30 மணி வரையான காலப்பகுதியில் 30 நிமிட மின் விநியோகத் தடை நாட்டின் சில இடங்களில் பதிவாகும் என்று சக்தி வலு அமைச்சு அறிவித்துள்ளது.

மீண்டும் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்று ஏற்கெனவே மின்சக்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.