​பொலிஸாரிடமிருந்து பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


​பொலிஸாரிடமிருந்து பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கம்பஹா – கொட்டதெனியாவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் காணாமல்போயுள்ளமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்விரு சிறுவர்களும் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கொட்டதெனியாவ காவல்நிலையத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போயுள்ள சிறுவர்களில் ஒருவரான கவீஷ சந்தகெலும் (10) என்பவர் இறுதியாக நீல நிற டீ – ஷர்ட்டும், கறுப்பு நிறக்காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும், வாயின் மேற்பகுதியில் இரு பற்கள் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல்போயுள்ள மற்றைய சிறுவனான அகில தேதுனு (12) என்பவர், இறுதியாக நீல நிற கொலருடனான டீ – ஷர்ட் மற்றும் சிவப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாகவும், மேற்பக்க பல் வரிசை முன்னோக்கி சற்று நீண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்திருப்பின் கொட்டதெனியாவ காவல்நிலைய பொறுப்பதிகாரியின் 071 85 91 634 அல்லது கொட்டதெனியாவ காவல்நிலையத்தின் 033 – 22 72 222 அல்லது 033 – 22 40 050 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரியுள்ளனர்.