மீண்டும் நாடு முடக்கப்படுமா? சுகாதார அமைச்சரின் அறிவிப்பு வெளியானது

தமிழ் ​செய்திகள் இன்று


மீண்டும் நாடு முடக்கப்படுமா? சுகாதார அமைச்சரின் அறிவிப்பு வெளியானது

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு முடக்கப்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எனினும், நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சுகாதார கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டுமென பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.