நாட்டு மக்களுக்கு அடுத்த இரண்டு அதிர்ச்சி செய்திகள்

தமிழ் ​செய்திகள் இன்று


நாட்டு மக்களுக்கு அடுத்த இரண்டு அதிர்ச்சி செய்திகள்

வாடகை முச்சக்கரவண்டிகளுக்கான முதல் கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் சவாரி கட்டணத்தை அதிகரிக்க முச்சகரவண்டி சாரதிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய, முதல் கிலோ மீற்றருக்காக இதுவரையில் அறவிடப்பட்டு வந்த 50 ரூபா என்ற கட்டணத்தை 80 ரூபா வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டண உயர்வு அத்தியாவசியமானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு இன்று பிற்பகல் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மேலும், அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது நாடு எதிர்கொண்ட நிலைமையை கருத்திற் கொண்டு பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.