மீண்டும் திருமணம் செய்துகொண்ட மகேல

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய பயிற்றுவிப்பு ஆலோசகருமான மஹேல ஜயவர்தன மறுமணம் செய்துக்கொண்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி தென் மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் குறித்த மறுமண நிகழ்வு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடாஷா மாகலந்த என்ற பெண்ணையே மஹேல இவ்வாறு மறுமணம் செய்துக் கொண்டுள்ளார்.