பால்மா விலை மீண்டும் அதிகரிக்கிறது

தமிழ் ​செய்திகள் இன்று


பால்மா விலை மீண்டும் அதிகரிக்கிறது

நாட்டில் ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாடு, எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் நிவர்வத்தியாகும் என பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை மீண்டும் அதிகரிக்க நேரிடும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

தற்போது சந்தையில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு. சில இடங்களில் அதிக விலைக்கு பால்மா விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், டொலர் பற்றாக்குறை காரணமாக வங்கிகளின் கடன் உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தாமதமடைந்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.