நீண்ட இழுபறிக்கு பின்னர் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தமிழ் ​செய்திகள் இன்று


நீண்ட இழுபறிக்கு பின்னர் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அவர் டிசம்பர் 31ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதன்படி, குறித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பி.பீ ஜயசுந்தர பதவி விலகியதன் பின்னர் காமினி செனரத் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காமினி செனரத் தற்போது பிரதமரின் செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.

அதன்படி, வெற்றிடமாகவுள்ள பிரதமரின் செயலாளர் பதவிக்கு தற்போது நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் அநுர திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.