தடுப்பூசி செலுத்தாமல் வீட்டை விட்டு வௌியேறினால் கைது

தமிழ் ​செய்திகள் இன்று


தடுப்பூசி செலுத்தாமல் வீட்டை விட்டு வௌியேறினால் கைது

கொரோனாத் தொற்று பரவலானது பிலிப்பைன்ஸில் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் இதுவரை கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மத்திரமே வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றும், தேவையற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் கட்டாயமாகக் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டுடேர்டே (Rodrigo Duterte) எச்சரித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத வகையில், தினசரி கொரோனாத் தொற்றுப் பாதிப்பானது கடந்த வியாழக்கிழமை 17 ஆயிரத்தை எட்டியமை குறிப்பிடத்தக்கது.