பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 05 தமிழர்கள் விடுதலை

தமிழ் ​செய்திகள் இன்று


பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 05 தமிழர்கள் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 அரசியல் கைதிகள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.