பரசூட்டில் பறந்து தலைகீழாக மரத்தில் தொங்கிய நபர்

தமிழ் ​செய்திகள் இன்று


பரசூட்டில் பறந்து தலைகீழாக மரத்தில் தொங்கிய நபர்

கலஹா, லுல்கந்துர பகுதியில் பரசூட் டில் பறந்த வெளிநாட்டு பிரஜை விபத்தில் காயமடைந்துள்ளார்.

35 வயதான ரஷ்ய பிரஜையொருவரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர், ரெலிமங்கொட பிரதேசத்தில் தரையிறங்க முற்பட்ட வேளையில் சுமார் 30 அடி உயரமுள்ள மரமொன்றில் பராசூட் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.