சகல அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

தமிழ் ​செய்திகள் இன்று


சகல அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

சகல அமைச்சுகளும், அரச நிறுவனங்களும் பாவனைக்குட்படுத்தும் காணி, வாகனம் மற்றும் கட்டடங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன

இதன்படி, சகல அரச நிறுவனங்களிலும் அது தொடர்பான தகவல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல்வார காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு மேலதிகமாக மேலும் சில வாகனங்கள் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதுதவிர, அரச நிறுவனங்களின் காணி மற்றும் கட்டடம் ஆகியன தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், அது குறித்து ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சின் கட்டுப்பாட்டாளர் நாயகம் கே.ஏ.ரம்யா காந்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த அறிவுறுத்தலுக்கமைய அனைத்து அரசு நிறுவனங்களும் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.