திருமண நிகழ்வில் நடந்த கொடூரம் – ஒருவர் கொலை

தமிழ் ​செய்திகள் இன்று


திருமண நிகழ்வில் நடந்த கொடூரம் – ஒருவர் கொலை

திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (16) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் லுனுகம்வெஹெர, படவிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News Today in Sri Lanka