குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தின் திட்டம்

தமிழ் ​செய்திகள் இன்று


குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தின் திட்டம்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய , 5W, 10W மற்றும் 15W மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கலங்கள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், சுமார் 5W சூரியக்கலங்களைப் பெறுபவர்களுக்கு 1500 ரூபா வழங்கப்படும். அவர்கள் 10 வருடங்களின் பின்னர் 10,000 ரூபாவை பெற்றுக் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்திற்கமைய, ஆரம்ப கட்டத்தில் 14,000 வீடுகளுக்கு சூரியக்கலங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.