இரத்தம் படிந்த சீருடையுடன் தாய், தந்தைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

தமிழ் ​செய்திகள் இன்று


இரத்தம் படிந்த சீருடையுடன் தாய், தந்தைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

பேருவளை காலவில கந்த பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவி தாய் மற்றும் தந்தைக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாடசாலைக்கு செல்ல சீருடை அணிந்து இருந்த நிலையில், சிறிய தவறுக்காக பெற்றோர் தாக்கியதாக இரத்தம் படிந்த சீருடையுடன் மாணவி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி பேருவளை பொலிஸ் பிரிவில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் சாதாரண தரம் படித்து வருகிறார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மாணவியின் தந்தை சிவில் பாதுகாப்பு படையில் உப கண்காணிப்பாளராக கடமையாற்றுகிறார். பெற்றோரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்ற மாணவி காலை உணவை உண்ணாமல் இருந்ததால், பொலிஸ் உணவை வழங்கி உபசரித்து விட்டு முறைப்பாட்டை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.