இளைஞரை நிர்வாணமாக்கி தாக்கிய கணவன் மனைவி

சியம்பலாண்டுவ பகுதியில் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி தம்பதியினர் தாக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

சம்பவத்தில் தாக்கப்படும் இளைஞர் குறித்த பெண்ணுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பதியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர் தினமும் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதால் இவ்வாறு தானும் தனது மனைவியும் அவரை தாக்கியதாக கைதான கணவர் காவல்துறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.