மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்?

தமிழ் ​செய்திகள் இன்று


மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்?

இலங்கையில் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்கிறது.

இதற்கான சட்டத்தன்மை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் இந்த நடைமுறைப் பின்பற்றப்படுகிறது.

அதுபோன்று இலங்கையிலும் அமுல்படுத்துவது தொடர்பாகவும், இதற்கான சட்ட வரையறை தொடர்பாகவும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினத்தில் (22) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 70
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 200

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 338
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 80
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 7,299

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை