அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கம்மன்பில, சம்பிக்க கூறியுள்ள விடயம்

தமிழ் ​செய்திகள் இன்று


அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கம்மன்பில, சம்பிக்க கூறியுள்ள விடயம்

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கம்மன்பில, சம்பிக்க கூறியுள்ள விடயம்

அண்மையில் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஒரு காலத்தில் ஒரே கட்சியில் இருந்தவர்கள்.

தற்போது இருவரும் தனித்தனியாக அரசியல் பயணத்தில் ஈடுபட்டாலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் இருவரிடத்திலும் பொதுவான கருத்து நிலவுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளதால், ராஜபக்சக்களுக்கு எதிரான பொது வேட்பாளரை இப்போதே தீர்மானிக்க முடியாது என்பது ரணவக்கவின் கருத்து.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப வேட்பாளர் தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ரணவக்க பல ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கம்மன்பிலவும் இதே கருத்தையே கொண்டுள்ளார்.

தேசிய வார இறுதி நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க புதிய சக்தி ஒன்று திட்டமிடப்படுகிறதா என கம்மன்பிலவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

“ஏழு கடலையும் கட்டுக்குள் வைக்க நாம் தயாரில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளன. நோக்கம் மற்றும் வடிவமைப்பு “இந்த பாரிய பொருளாதார பேரழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதே எங்களின் ஒரே நோக்கமும் திட்டமும் ஆகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.