தங்கம் விலை மேலும் அதிகரித்தது – இன்றைய விலை நிலவரம்

தமிழ் ​செய்திகள் இன்று


தங்கம் விலை மேலும் அதிகரித்தது – இன்றைய விலை நிலவரம்

தங்கம் விலை மேலும் அதிகரித்தது – இன்றைய விலை நிலவரம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கத்தின் விலை, பவுண் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

22 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளதென கொழும்பு செட்டியார் தெரு நகை கடை உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஆர். பாலசுப்ரமணியம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை – Jaffna gold price

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 700 ரூபா என தெரியவருகிறது.

எனினும் இந்த வார ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டிருந்தது.

அத்துடன் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் இந்த வார ஆரம்பத்தில் ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இலங்கையில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைய ஆரம்பித்ததை தொடர்ந்தே தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நாடும் கடும் பொருளாதார நெருக்கடியை அடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.