நீர் விநியோகம் துண்டிக்கப்படும் – கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமாம்

தமிழ் ​செய்திகள் இன்று


நீர் விநியோகம் துண்டிக்கப்படும் – கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமாம்

நீர் விநியோகம் துண்டிக்கப்படும் – கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமாம்

ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு தொடர்ச்சியாக நீர் கட்டணம் செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகம் துண்டிப்பதற்கான நடவடிக்கையை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆரம்பித்துள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக, கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு, நீர்விநியோகத்தை துண்டிக்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அறவிடப்படவேண்டிய நிலுவைக் கட்டணம் 7.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகம் துண்டிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், நீர்விநியோகத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.