பிற்போடப்பட்ட பரீட்சைகள் – காரணம் என்ன தெரியுமா?

பரீட்சைகள் பிற்போடப்பட்ட காரணம் என்ன தெரியுமா?
exam school 4 2

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகளும் பிற்போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் மூலப்பொருட்களின் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடதாசி மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக, 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டு, 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை பரீட்சை திகதிகளுக்கு மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்