எரிபொருள் வரிசையில் இரண்டாவது நபரும் உயிரிழப்பு – மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

தமிழ் ​செய்திகள் இன்று


எரிபொருள் வரிசையில் இரண்டாவது நபரும் உயிரிழப்பு – மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

எரிபொருள் வரிசையில் இரண்டாவது நபரும் உயிரிழப்பு – மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மாகொலையைச் சேர்ந்த ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த 70 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மயங்கி விழுந்தவர், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துவிட்டார் என கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்றையதினம் கண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான முதியவர் உயிரிழந்தீருந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டி வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதானவர், மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த போது, மயங்கி விழுந்து நேற்று (19) உயிரிழந்திருந்தார்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த அந்த நபர், மழையில் நனைந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வத்தேகம உடுதலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் இலியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்றயை தமிழ் செய்திகள்