மின்சார கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்படுகிறதா?

தமிழ் ​செய்திகள் இன்று


மின்சார கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்படுகிறதா?

மின்சார கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்படுகிறதா?

இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் பிரகாரம் மின்சார கட்டணம் 500% அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.

“பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பல்வேறான மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை உட்கார்ந்து பார்க்க வேண்டும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். அத்தகைய சூழ்நிலையில் நாடு வீழ்ந்துள்ளது,” என்றார்.