சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பது ஏன்? ஜீவன் தொண்டமான்

தமிழ் ​செய்திகள் இன்று


சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பது ஏன்? ஜீவன் தொண்டமான்

சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பது ஏன்? ஜீவன் தொண்டமான்

அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்பதற்காக சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கவில்லை என்று ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானமானது, ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி ஒன்றை வழங்க அரசாங்கம் மறுத்ததன் விளைவாகவே மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக எமது செய்தி சேவை ஜீவன் தொண்டமானை தொடர்பு கொண்டு கேட்ட போது, சர்வகட்சி கூட்டத்தின் மீது நம்பிக்கையில்லை என்பதாலேயே இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.