மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விஷேட கடிதம்

தமிழ் ​செய்திகள் இன்று


மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விஷேட கடிதம்

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விஷேட கடிதம்

நிலையான அபிவிருத்தி மற்றும் 13 விடயப்பரப்புகளில் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மகாநாயக்கர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்த கடிதத்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியமும் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்க அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உள்ளூர் பொருளாதார மாதிரியை உருவாக்குதல் ஆகியவையும் அவர்களின் கடிதத்தில் முன்மொழிவுகளாக பதிவிடப்பட்டுள்ளன.

வெளிப்படையான பொருளாதாரத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டுப் பணம் அனுப்புவதை அதிகரிக்கவும், ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் அந்தக் கடிதம் முன்மொழிகிறது.

புதிய முதலீடுகளை ஊக்குவித்தல், பொதுக் கடனை மறுசீரமைத்தல், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் விரயம், ஊழல் மற்றும் வளங்களை துஸ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதற்கான நிலையான திட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.