முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிரடிக் கைது

தமிழ் ​செய்திகள் இன்று


முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிரடிக் கைது

முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிரடிக் கைது

சட்டவிரோதமான முறையில் கஜமுத்து வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை விருந்தினர் இல்லத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (25) பிற்பகல் அம்பாறை பிரதேசத்தில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சற்றுமுன்னர் கைது

15 வயது சிறுமி விவகாரம்; முன்னாள் அமைச்சர் கைது