சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund – IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை (IMF report on Sri Lanka) வௌியிட்டது

தமிழ் ​செய்திகள் இன்று


சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund – IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை (IMF report on Sri Lanka) வௌியிட்டது

சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund – IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை (IMF report on Sri Lanka) வௌியிட்டது

சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund – IMF) இலங்கை தொடர்பான ‘உறுப்புரை 4’ ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை (IMF report on Sri Lanka) வெளியிடப்பட்டுள்ளது.

அதன் நிறைவேற்று அதிகாரியின் இலங்கை தொடர்பான அறிவித்தலும் இந்த அறிக்கையில் (IMF report on Sri Lanka) உள்ளடங்கியுள்ளது.

எமது நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு இந்த அறிக்கையில் உள்ளடங்குகிறது.

அந்த அறிக்கையில், கொவிட்-19 இலங்கயைின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்ததுடன், இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை இழப்பு மற்றும் பல கடுமையான முடக்கங்கள் தேவைப்பட்டன.

கொவிட்-19 இன் தாக்கம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund – IMF) , இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயங்களை உடன் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் சமூக பாதுகாப்பை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Full Report – IMF report on Sri Lanka |  சர்வதேச நாணய நிதியம் வௌியிட்ட முழுமையான அறிக்கை