ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் வௌியிட்ட அறிக்கை (IMF report on Sri Lanka 2022) தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்தவேண்டும் என்றே அவர் கோரியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடப்பில் 95 பக்கள் அடங்கிய ஆவணத்தை (IMF report on Sri Lanka 2022) சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.
அது தொடர்பில் உடனடியாக நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துமாறு ரணில் விக்கிரமசிங்க இன்று கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.