தங்கம் விலை இன்று இலங்கை சந்தையில் (Gold rate today colombo) கடுமையாக உயர்ந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் தற்போது தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தங்கம் விலை இன்று இலங்கை (Gold rate today colombo) சந்தையில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 200,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு தங்கம் இல்லை என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையாயின் அவர்கள் வழங்கும் தங்கத்தைக் கொண்டு மாத்திரம் தங்க நகைகளை தயாரிக்க முடியும் என்று கூறுகின்றனர்.