நாளை மின்தடை செய்யப்படும் காலத்தில் மாற்றம் – இன்று நள்ளிரவு முதல் மின்வெட்டு

தமிழ் ​செய்திகள் இன்று


நாளை மின்தடை செய்யப்படும் காலத்தில் மாற்றம் – இன்று நள்ளிரவு முதல் மின்வெட்டு

நாளை மின்தடை செய்யப்படும் காலத்தில் மாற்றம் – இன்று நள்ளிரவு முதல் மின்வெட்டு

நாளை தினம் 13 மணிநேரம் (Power cut today time) மின்தடை மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபையினால் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை மின்தடை அமுலாகும் விதம் தொடர்பான அட்டவணை இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவினால் வெளியிடப்படவுள்ளது.

மின்வெட்டு இன்று – இன்றைய மின்வெட்டு காலம் நீடிப்பு (Power cut today Sri Lanka); உச்சபட்ச நெருக்கடி

இதேவேளை திட்டமிடப்பட்ட மின்துண்டிப்பு மேலும் பல மணித்தியாலங்களுக்கு நீடிக்கக்கூடும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (30) நள்ளிரவை தாண்டியும் நாளை (31) அதிகாலை வரை மேலும் பல மணிநேரத்துக்கு இந்த மின்துண்டிப்பு தொடரக்கூடும் என குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதேவேளை, தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வறட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 (Power cut today time) மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர அட்டவணையை வெளியிடுவது இலகுவானதாக இருக்கும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

மின்வெட்டு இன்று – இன்றைய மின்வெட்டு காலம் நீடிப்பு (Power cut today Sri Lanka); உச்சபட்ச நெருக்கடி