நாளை முதல் மேற்கொள்ளப்பட உள்ள விஷேட போக்குவரத்து திட்டம்

தமிழ் ​செய்திகள் இன்று


நாளை முதல் மேற்கொள்ளப்பட உள்ள விஷேட போக்குவரத்து திட்டம்

நாளை முதல் மேற்கொள்ளப்பட உள்ள விஷேட போக்குவரத்து திட்டம்

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இயன்றளவு மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் பயணத்தின் போது கோவிட் சட்ட விதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.