வாகன சாரதிகளுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்

வாகன சாரதிகளுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
driving

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றில் இருந்து ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகும் திகதியிலிருந்து 06 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 01ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 30ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகும் திகதியிலிருந்து 03 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரம் பெற உள்ளவர்களுக்கு ஒரு விஷேட அறிவிப்பு

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்