புதிய அமைச்சர்கள் நியமனம் – அலி சப்ரி நிதி அமைச்சராக பதவியேற்பு

தமிழ் ​செய்திகள் இன்று

புதிய அமைச்சர்கள் நியமனம் – அலி சப்ரி நிதி அமைச்சராக பதவியேற்பு

புதிய அமைச்சர்கள் நியமனம் – அலி சப்ரி நிதி அமைச்சராக பதவியேற்பு

புதிய அமைச்சரவையின் அமைச்சர்களாக முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்படி நிதியமைச்சராக அலி சப்ரி சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும், வெளிவிவகார அமைச்சராக ஜீ.எல்.பீரிஸூம் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

பெருந்தெருக்கள் அமைச்சராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

புதிதாக பதவியேற்கவுள்ள ஏனைய அமைச்சர்கள் தொடர்பான விபரங்களுக்கு எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.