முழு அமைச்சரவையும் இராஜினாமா

தமிழ் ​செய்திகள் இன்று


முழு அமைச்சரவையும் இராஜினாமா

முழு அமைச்சரவையும் இராஜினாமா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு இடம்பெற்றது.

இதன்போது, அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.