இன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மாற்றம் – மற்றொருவரும் பதவி விலகினார்

இன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மாற்றம் - மற்றொருவரும் பதவி விலகினார்
parliament 2

நாடாளுமன்றில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இன்று சபையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அத்துடன், நாடாளுமன்றில் முன்னரைப் போன்றே தம்முடன் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக விமல் வீரவன்ச அறிவித்தார்.

இதேவேளை தாம் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாக முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்