அநுரகுமார திஸாநாயக்க வின் வாகனத்தில் ஏறிய மர்ம நபர் யார்?

தமிழ் ​செய்திகள் இன்று


அநுரகுமார திஸாநாயக்க வின் வாகனத்தில் ஏறிய மர்ம நபர் யார்?

அநுரகுமார திஸாநாயக்க வின் வாகனத்தில் ஏறிய மர்ம நபர் யார்?

நேற்றைய தினம் நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தமது வாகனத்தில் பயணித்தபோது, தலைக்கவசம் அணிந்தவாறு அந்த வாகனத்தில் ஒருவர் ஏறியமை குறித்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது கேள்வி எழுப்பினார்.

இது குறித்து பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, தமது பாதுகாப்புக்காக பிரத்தியேகமாக நபர்களை வைத்துக்கொள்ளக்கூடிய உரிமை தமக்கு உள்ளதாகவும், குறித்த நபர் அவ்வாறான ஒருவர் என்றும் குறிப்பிட்டார்.

உந்துருளியில் வந்து இடையில் இறங்கியிருந்த குறித்த நபர் தமது வாகனத்தில் ஏறினார் என்றும் அநுரகுமார குறிப்பிட்டார்.

அத்துடன், அது குறித்து விசாரணை நடத்தப்படுமாயின், அந்த நபரை முன்னிலைப்படுத்த தயார் என்றும் அநுரகுமார திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.