நாட்டின் நிதி அமைச்சர் யார்? அலி சப்ரி தெரிவித்த விடயம்

நாட்டின் நிதி அமைச்சர் யார்? அலி சப்ரி கூறிய விடயம்
ali sabry

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான தற்போதைய ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று இடம்பெற்றது.

இதன்போது, பதவி விலகுவதாக அறிவித்த நிதியமைச்சர் உரையாற்றினார்.

அவ்வேளையில், புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதனை தெளிவுடுத்திய, அலி சப்ரி, தான் நிதியமைச்சராகவே தற்போது உரையாற்றுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி தனது கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தனக்கு பிறகு நிதியமைச்சை பொறுப்பேற்க எவரும் முன்வராததாலும், நாட்டின் எதிர்காலம் கருதி தானே பதவியில் நீடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்