ரணில் விடுத்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி

ரணில் விடுத்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி
ranil wikramasinghe gotabaya rajapakse

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தையும் ராஜபக்ஷர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

தற்போது, காலி முகத்திடலில் பெருந்திரளாவர்கள் ஒன்றிணைந்து, ஜனாதிபதியும் அரசாங்கத்தையும் வீட்டுக்கு போகுமாறு கோஷமெழுப்பி கொண்டிருக்கின்றனர். அந்த கோஷம், காலிமுகத்திடல் கடலலை சத்தத்தையும் மேவி நிற்கின்றது.“

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பாராளுமன்றக கட்டடத் தொகுதியில், கடந்த 6 ஆம் திகதி முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், நாட்டு மக்களுக்கு உரையாற்றுமாறு ஜனாதிபதியிடம் ரணில் வலியுறுத்தியதாகவும். அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துவிட்டார் என்றும் அறியமுடிகின்றது.

You may also like...

1 Response

  1. Nizamhm says:

    கூறுவதற்கு சரக்கொன்றும் அவரிடம் இல்லை!

உங்கள் கருத்தை கூறுங்கள்