இலங்கை பொருளாதார நெருக்கடி – ரணிலிடமிருந்து வந்த அபாய எச்சரிக்கை

தமிழ் ​செய்திகள் இன்று


இலங்கை பொருளாதார நெருக்கடி – ரணிலிடமிருந்து வந்த அபாய எச்சரிக்கை

இலங்கை பொருளாதார நெருக்கடி – ரணிலிடமிருந்து வந்த அபாய எச்சரிக்கை

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் வாழ கூட முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு பதிலளித்து ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு ரணில் விக்ரமசிங்கவின் உரை அடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இளைஞர்களின் போராட்டமானது இலங்கையின் தற்போதைய அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் புரட்சி. கூடிய கூட்டத்தை பாருங்கள் பாரியளவில் கூடியுள்ளனர்.

அரசியல் கட்சிகள் அதிகளவில் மக்களை அழைத்து வந்துள்ளனர். அண்மைய காலத்தில் நாம் கண்ட மிகப் பெரிய மக்கள் கூட்டம்.

தமிழ் செய்திகள் இன்று; Sri lanka tamil news today

ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி

பேருந்துகள், பார ஊர்திகள் இன்றி ஒரு செய்தி மூலம் இளைஞர்கள் ஒன்று திரண்டுள்ளனர். எவரும் மது அருந்தி இருக்கவில்லை, சத்தமிடவில்லை. பட்டாசுக கொளுத்தவில்லை. மிகவும் அமைதியாக செய்தி ஒன்றை வழங்க இந்த இடத்திற்கு வந்தனர்.

கண்டியிலும் வேறு இடங்களிலும் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடினர். இளைஞர், யுவதிகள் தமது பலத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். நாடாளுமன்றம், அரசியல் கட்சி மற்றும் சிவில் அமைப்புகளுடன் ஒப்பிடும் போது இளைஞர்களின் அணியே முன்நோக்கி வந்துள்ளது.

ஏன் முன்நோக்கி வந்துள்ளனர். ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரினர். இதற்கு வழங்கப்பட்ட பதில் தொடர்பில் அவர்கள் திருப்தியடையவில்லை.

நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் திருப்தியடையவில்லை. இதனால், இளைஞர், யுவதிகள் தமது பலத்தின் முன்நோக்கி வந்துள்ளனர்.

அனைவரும் இளைஞர்கள். நடுத்தர வகுப்பு மக்களுடன் இந்த எழுச்சி ஆரம்பமானது. எனினும் இளைய தலைமுறையினரே முன்நோக்கி வந்தனர்.

தமிழ் செய்திகள் இன்று; Sri lanka tamil news today

அவர்களே அடையாளமாக மாறினர்.விவசாயிகள், முச்சக்கர வண்டி ஒட்டுநர்கள், சிறிய வியாபாரங்கள் செய்வோர் மற்றும் அரச ஊழியர்கள் இருக்கின்றனர்.

இளைஞர்கள் தமக்கான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்குமாறு கோருகின்றனர். உங்களால் முடியாது என்றால், நாங்கள் அதனை செய்கிறோம் என என இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலமாக இளைஞர்கள் அரசியல் அதிகாரத்திற்கு செய்தியை வழங்கியுள்ளனர்.

கோட்டா வீட்டுக்கு போங்கள் என்றே இளைஞர்கள் கூறுகின்றனர். கோட்டா இன்னும் வீட்டுக்கு செல்லவில்லை. என்னை மாத்திரமே வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இவை குறித்து சிந்தித்து பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

புதிய அதிகாரம் மையம் உருவாகியுள்ளது. ஏனைய அதிகார மையங்கள் பலவீனமடைந்துள்ளன. இதனை சம்பிரதாயபூர்வமான அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

நாட்டின் என்ன நடக்கின்றது என்பதை உணர வேண்டும். இதனை உணரவில்லை என்றால், எம்மால் முன்நோக்கி செல்ல முடியாது.

Breaking news Sri Lanka today tamil; இலங்கை செய்திகள் இன்று

அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள், வர்த்தக தலைவர்கள், சமய தலைவர்கள் இவர்கள் எவரையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

தமக்கான எதிர்காலத்தை கோருகின்றனர். தம்மை பாதுகாத்து தருமாறு நடுத்தர வகுப்பினர் கோருகின்றனர்.

இது பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம் மட்டுமே. பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். பண வீக்கம் என்ற பிரச்சினை உடனடியாக தீராது, மேல் நோக்கி சென்றே கீழ் நோக்கி வரும்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பலருக்கு வாழவும் கஷ்டம் ஏற்படும். பணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டாலும் பிரச்சினைகள் ஏற்படும்.

மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரித்தது, இதன் காரணமாக சிறிய வர்த்தகங்கள் பாதிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.