காலி முகத்திடலில் அதிக பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டது ஏன்?

தமிழ் ​செய்திகள் இன்று


காலி முகத்திடலில் அதிக பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டது ஏன்?

காலி முகத்திடலில் அதிக பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டது ஏன்?

காலி முகத்திடலில் போராட்டம் இடம்பெறும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை ட்ரக் வண்டிகள், அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, பொதுமக்களுக்கு உள்ள சட்டரீதியான உரிமையைத் தடுப்பதற்கு எவரேனும் நடவடிக்கை எடுத்தால், அது குறித்து தீவிர அவதானம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறான முயற்சிகள், நாட்டுக்கும், ஜனநாயகத்திற்கும், பொருளாரத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், தற்போதைய நாட்களில் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அந்த காவல்துறை ட்ரக் வண்டிகள் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

பின்னர், அந்த ட்ரக் வண்டிகளை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.