நாளை மின்தடை (Power cut tomorrow) தொடர்பில் வௌியான அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


நாளை மின்தடை (Power cut tomorrow) தொடர்பில் வௌியான அறிவிப்பு

நாளை மின்தடை (Power cut tomorrow) தொடர்பில் வௌியான அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, நாளை (Power cut tomorrow) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.

அதேபோல், 19 மற்றும் 20ஆம் திகதிகளிலும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, குறித்த தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.