எரிபொருள் விலை அதிகரிப்பால் நீக்கப்பட்ட கட்டுப்பாடு

தமிழ் ​செய்திகள் இன்று


எரிபொருள் விலை அதிகரிப்பால் நீக்கப்பட்ட கட்டுப்பாடு

எரிபொருள் விலை அதிகரிப்பால் நீக்கப்பட்ட கட்டுப்பாடு

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் கட்டுப்பாடு (வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்தவாரம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, உந்துருளிகளுக்கு 1,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், மகிழுந்துகள், சிற்றூர்திகள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 5,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவிருந்தது.

எவ்வாறிருப்பினும், பேருந்துகள், பாரவூர்திகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகளையும் நீக்குவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.