பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வௌியிட்ட அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வௌியிட்ட அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வௌியிட்ட அறிவிப்பு

முழுமையான அரசியலமைப்பு திருத்தம் ஒன்றுக்கான ஆரம்பப்படியாக 19வது அரசியல் அமைப்பில் அவசியமான திருத்தம் மற்றும் நடைமுறை முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சற்றுமுன் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

19ஆவது திருத்த சட்டத்தை சில திருத்தங்களுடன் மீள அமுலாக்குவது தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அமையுமென தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் நாடாளுமன்றம் இன்று முதன்முறையாக கூடியது.

குறுகிய காலத்துக்குள் இந்த முனைப்பு மேற்கொள்ளப்படும். நாட்டின் நிலைமைகள் தொடர்பாக அனைவருக்கும் புரிந்துணர்வு இருக்கிறது.

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படும். எந்தவொரு அரசாங்கமும் பொதுமக்களை வேண்டுமென்றே கஸ்டத்துக்கு உள்ளாக்குவதில்லை.

எனினும் இன்று பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார முகாமைத்துவம் உரியமுறையில் செயற்படாமை காரணமாக இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வை காண பேச்சுவார்த்தைகள் அவசியம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானம்; 

இதன் அடிப்படையிலேயே காலிமுகத்திடலில் போராட்டம் நடத்துவோருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எரிபொருள் விநியோகத்தில் கிரமமான முறை மற்றும் மலையக பகுதிகளில் மழை பெய்யும் போது மின்சார பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் வரலாறு முழுவதும் எமது நாடு எதிர்நோக்கிய பொருளாதார சவால்கள் தற்போது கடினமான நிலைமைக்கு வந்துள்ளது. மின்சார துண்டிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு என்பன எமக்கு கண்ணுக்கு தெரியும் கஷ்டங்கள் மாத்திரமே.

இதனால் ஏற்பட்டுள்ள பல கஷ்டங்களையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை நான் அறிவேன். இந்த நெருக்கடியில் இருந்து மீள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் இது என நான் நினைக்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அவர்களிடம் இருந்து எமக்கு சாதகமான பதில்கள் கிடைத்து வருகின்றன.

அத்துடன் எமது நட்பு நாடுகள் பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய எமக்கு உதவி வருகின்றன. நிதியமைச்சர் மற்றும் நிதியமைச்சு நாட்டுக்காக தற்போது தமது கடமைகளை சரியாக செய்து வருகின்றனர்.

நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வை காண்பதுடன் மீண்டும் இப்படியான நெருக்கடி ஏற்படாத வகையில் நிரந்த தீர்வுக்காண அடித்தளத்தை இட வேண்டும்.

எதிர்ப்புக்கு அப்பால் சென்ற தலையீடு அவசியம் என்பதை இதன் காரணமாகவே இதற்கு முன்னர் நான் நினைவு கூறியிருந்தேன் என்றார்.

சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund ; IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை (IMF report on Sri Lanka) வௌியிட்டது

எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

எரிவாயு தட்டுப்பாடு எப்போது நீங்கும்? வௌியான தகவல்