பேருந்து கட்டண உயர்வு மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்கள் விலை அதிகரிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


பேருந்து கட்டண உயர்வு மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்கள் விலை அதிகரிப்பு

பேருந்து கட்டண உயர்வு மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்கள் விலை அதிகரிப்பு

இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து பிரயாண கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டண உயர்வு? எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அதற்கமைய, 20 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக அதிகரிப்படுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்கள் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, நாளை முதல் பாண் 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பாண் விலை 10 ரூபாவால் அதிகரிக்கிறது?

கோதுமை மா விலை அதிகரிப்பு

அவ்வாறே, ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்கள் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கோதுமை மா கிலோவொன்றின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ப்றீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதுதவிர உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

இதற்கமைய ஃப்ரைட் ரைஸ், கொத்து மற்றும் பகலுணவுப் பொதி உள்ளிட்டவற்றின் விலைகளை 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெதுப்பக உற்பத்தி பொருட்கள் விலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்