ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – கடிதம் மூலம் அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – கடிதம் மூலம் அறிவிப்பு

ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – கடிதம் மூலம் அறிவிப்பு

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறித்த விவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என அஸ்கிரிய மாநாயக்க தேரரின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ​மஹாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்தன.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஜனாதிபதி உட்பட அனைத்து பிரதிநிதிகளும் பதவி விலக வேண்டுமென தொடர்ந்தும் ஒருமித்த குரல் எழுப்பி வருகின்றனர்.

இடைக்கால அரசாங்கம் அமைத்தாலும் நானே பிரதமர்; மஹிந்த ரஜபக்ஷ

மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ள பதில்